Designed by Iniyas LTD
அட்டையில்லா பணப் பட்டுவாடா ஐசிஐசிஐயின் புதிய திட்டம்
வாடிக்கையாளர் தான் விரும்பும் நபரின் செல்போன் எண்ணை அளித்தால், அந்த நபருக்கு பணம் அனுப்பும் புதிய திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி மும்பையில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்களது வங்கி வாடிக்கையாளர்கள் தான் விரும்பும் நபரின் செல்போன், முகவரி விவரத்தை அளித்தால் அந்த நபருக்கு பணம் அனுப்பும், “அட்டையில்லா பணப் பட்டுவாடா’ என்ற புதிய திட்டம் ஐசிஐசிஐ வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் குறிப்பிடும் நபருக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவரது செல்போனுக்கு 6 இலக்க ரகசிய எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
தகவல் கிடைத்த 2 நாள்களுக்குள், அந்த எண்ணைப் பயன்படுத்தி ஐசிஐசிஐ வங்கியின் ஏதாவதொரு ஏடிஎம் மையத்தில் பணத்தை அவர் எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பணம் அனுப்பும் வசதியை வாடிக்கையாளர்கள் ஆன்-லைன் வங்கிப் பரிவர்த்தனை மூலமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.