தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அணித்தலைவர் பதவியில் நீடிப்பது பற்றி அணித்தலைவர் டோனி பதிலளித்துள்ளார்

இங்கிலாந்து அணிக்கெதிரான மோசமான டெஸ்ட் தோல்விகளால் அணித்தலைவர் பதவியில் நீடிப்பது பற்றி அணித்தலைவர் டோனி பதிலளித்துள்ளார். இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் முதல் டெஸ்டில் டிரா, 2வது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 3வது மற்றும் 4வது டெஸ்டில் டெஸ்டில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 15ம் திகதி தொடங்கியது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோற்று தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது.dhoni_003

இந்த மோசமான தோல்வியால் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது  பற்றி அணித்தலைவர் டோனி கூறுகையில், 2011ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தோம். அதைவிட தற்போதுள்ள நிலை மோசமானதாக கருதவில்லை.

ஏனெனில் 2011ல் ஏற்பட்ட தோல்வியே மிகவும் மோசமானது. அதே நேரத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்று கடந்த 3 டெஸ்டிலும் தோற்றது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்களது துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க வரிசையும், அதை தொடர்ந்து மிடில் ஆர்டர் வரிசையும் ஏமாற்றம் அளித்தது. லார்ட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியில் நாங்கள் அதிகமான நம்பிக்கை அடையவில்லை.

டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்ததற்காக டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவீர்களா? என்று கேள்வி எழுப்புகிறீர்கள். 2011ல் ஏற்பட்ட தோல்வியின் போதும் இதே கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள். நான் போதுமான வலுவுடன் இருக்கிறேனா என்பது உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

Comments
Loading...