தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அணுசக்தி வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் இந்தியா சேர ஆதரவு தர வேண்டும்

என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் அணு மூலப்பொருட்கள், அணுஉலை தொழில் நுட்பங்களை பிறநாடுகளுக்கு விநியோகம் செய்து கொள்கின்றன. இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இந்தியா முயற்சித்து வருகிறது.mo-oba

இதற்கு அமெரிக்கா, மெக்சிகோ, ரஷியா, மற்றும் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.  ஆனால், இந்தியா என்டிபிடி (NTPT) எனப்படும் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாததால் இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி.யில் இடம் பெற வாய்ப்பளிக்கக் கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, வரும் 24–ந் தேதி என்.எஸ்.ஜி. பேரவை கூட்டம் சியோலில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில்தான் இந்தியாவின் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.   இந்நிலையில், அணுசக்தி வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் இந்தியா சேர ஆதரவு தர வேண்டும் என்று உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.   இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இது தான் சில நேரங்களில் அமெரிக்காவின் கொள்கையாக இருந்து வருகிறது என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்தியா உறுப்பினராக தயாராக உள்ளது. இந்தியாவிற்கு ஆதரவு அளிக்குமாறு பங்கு கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்துகிறது.   அதே வேளையில் பங்கு பெறும் நாடுகள் ஒருமித்த இறுதி முடிவை எடுக்க வேண்டியுள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...