தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிபர் தேர்தலில் போட்டியிட தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வு

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:  donald-trump

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாகாணவாரி வாக்கெடுப்பு, நெவாடா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் 46 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவரை விட 20 புள்ளிகள் குறைவாகப் பெற்று சக போட்டியாளர்களான மார்கோ ரூபியோ, டெட் குரூஸ் ஆகியோருக்கு இடையே இரண்டாவது இடத்துக்கான பலத்த போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசுகையில், “”நாம் வெற்றி பெறுவோம் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பையும் மீறி நாம் கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் வெற்றி பெற்று வருகிறோம்” என்றார்.  ஏற்கெனவே, தெற்கு கரோலினா, நியூ ஹாம்ஷைர் ஆகிய மாகாணங்களில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற டிரம்ப், தொடர்ந்து மூன்றாவது முறையாக நெவாடா மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...