Designed by Iniyas LTD
அதிமுக ஆட்சியின் அவலங்களுக்கு முடிவுகட்ட காங்கிரசுடன் கூட்டணி : ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் அவலங்களுக்கு முடிவு கட்ட காங்கிரசோடு இணைந்து செயல்பட இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆதித்தமிழர் பேரவை சார்பில் சென்னையில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், அருந்ததியின மக்களின் நலனுக்காக பாடுபடுவதில் மட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரசோடு இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
மேலும் அக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,ஸ்டாலினும் நானும் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். ஆனால், தேர்தல் வரும்போது தான் அது தேர்தல் கூட்டணியா என்று தெரியும் என அவர் தெளிவுபடுத்தினார். மேலும், அருந்ததியின மக்களுக்காக திமுகடன் சேர்ந்து செயலாற்றுவோம் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.