Designed by Iniyas LTD
அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுவரொட்டிகள்
சிவகங்கையில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகியுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதிக்கு கற்பகம் இளங்கோ, திருப்பத்தூர் தொகுதிக்கு அசோகன், மானாமதுரை தொகுதிக்கு மாரியப்பன் கென்னடி, சிவகங்கை தொகுதிக்கு பாஸ்கரன் அம்பலமும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் பாஸ்கரன் அம்பலத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. பாஸ்கரன் அம்பலத்தை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.