தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதி உச்ச பாதுகாப்பிற்குள் நுழைந்த ஊடகவியலாளர்!

ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

மோடியின் வருகையினை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படிருந்தது. இதற்காக இந்தியாவில் இருந்தும் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றிருந்தனர்.இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்காக ஒரே காரில் பயணிப்பதற்கு தயாராகவிருந்தனர்.

இதன் போது குறித்த காரை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், அந்த பாதுகாப்பையும் மீறி ஊடகவியலாளர் ஒருவர் துணிச்சலாக புகைப்படம் எடுக்க முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...