தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் கைது..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்கள் ஜகதாப் பட்டினம், தங்கட்சி மடம் ஆகிய பிரதேசங்களை  சேர்ந்தவர்கள் எ நவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின்  இரண்டு படகுகள், மற்றும் ஏனைய உடமைகளும்   கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மீனவர்களை  இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...