தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அந்த போட்டோ லீக் ஆனதால் வாய்ப்பை இழந்த நடிகை!

தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்த வந்த புஸ் புஸ் நடிகை தற்போது எந்த மொழியிலும் படம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. நடன இயக்குநர் நடிகருடன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டதாம்.

அதுமட்டுமின்றி, பிரமாண்ட படம் ஒன்றில் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், நடிகை அந்த கதாபாத்திரத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று நடிகைக்கு பிடித்த இயக்குநரே கைவிட்டுவிட்டதால் செய்வதறியாது தவிக்கும் அந்த நடிகை அடிக்கடி படவாய்ப்புக்காக சென்னை வந்து செல்கிறாராம்.

அதுமட்டுமின்றி நடிகர்கள், தயாரிப்பாளர்களை பார்ட்டிக்கு அழைத்து அவர்களது படத்தில் வாய்ப்பு கேட்கலாம் என்ற நடிகையின் முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டதாம். சமீபத்தில் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த லீக்ஸால் பார்ட்டிகளுக்கு செல்ல நடிகர், நடிகைகள் பயப்படுகிறார்களாம்.

Comments
Loading...