Designed by Iniyas LTD
அனல் மின் உற்பத்தி தொடர்பாக இந்தியா – ஜப்பானுடன் சிறி.அரசு பேச்சு வார்த்தை
சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இந்தியா மற்றும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிலக்கரியை பயன்படுத்தி இந்த மின்சார நிலையத்தினால் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் போது, சுற்றாடல் பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை எரிவாயு மின் உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்காக இந்த பேச்சுவார்த்தை நடை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.