Designed by Iniyas LTD
அனல் மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலையில் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு நாவலடி சந்தியில், அனல் மின் நிலையம் அமையப் பெறுவதை கண்டித்து பிரதேச மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (10) காலை 9.00 மணி தொடக்கம் 10 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கைகளில் பதாதைகளையும் ஏந்தி தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான முகமட் லாகீர், குமாரசுவாமி நாகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
