Designed by Iniyas LTD
அனிதா தற்கொலை எதிரொலி! மதுரையில் மாணவர்கள் போராட்டம்
இந்திய மைய அரசு அறிமுகப்படுத்திய தடை தாண்டல் பரீட்சையால் மருத்துவக் கல்வியைப் பெற முடியாது போன மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதுரையில் மாணவா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு நடைபெற்ற திடீா் சாலை மறியலை பொலிஸார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர முடியாததால் தவறான முடிவுஎடுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு மத்திய–மாநில அரசுகளே காரணம் என்று கண்டனம் தெரிவித்து மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தினர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தீண்டாமை முன்னணியினர் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது.