தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனுமதியின்றி விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை

அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சிகளை பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.  law

தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், கூடுதல் மாநகர காவல் ஆணையர் சேஷாய் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், தேமுதிக மாவட்டச் செயலாளர் வி.என்.ராஜன், பாஜக சார்பில் தங்கமனோகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.ஏழுமலை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எம்.குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இந்தக் கூட்டத்தில், விளம்பரப் பலகை உரிமம், விளம்பர வரி நிர்ணயம், வசூலித்தல், மின்னணு விளம்பரங்கள் உள்ளிட்ட குறித்த விதிமுறைகள், அனுமதி பெறும் வழிமுறைகள் ஆகியவை குறித்து அறிவுறுத்தப்பட்டன.

மேலும், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு ஓராண்டு சிறை, 5 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீதிமன்ற ஆணைப்படி தற்போது அமலில் உள்ளது. இதனை கட்சியினர் மீறாமல், கவனமாக அதனை பின்பற்றி, அமைதியாகத் தேர்தலை நடத்த கட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

Comments
Loading...