Designed by Iniyas LTD
அனுராதபுரத்தில் துப்பாக்கி -ரவைகள் பெருமளவில் மீட்பு?
அநுராதபுரம், பலுகொல்லேவ பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி- 56 ரக துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இந்த ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 232 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்