தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் எனக்கு உண்டு நவிப்பிள்ளை தெரிவிப்பு.

download (1)

அனைத்துலக மனிதஉரிமை விவகாரங்களில் ஐ.நா மனிதஉரிமை சபையின் ஒப்புதலுக்கு அமைய, அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் தனக்கு இருப்பதாக, ஐ.நா மனிதஉரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் சிவில் அமைப்புக்களுடனான கருத்துப்பகிர்வில் மனிதஉரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை அவர்களிடம், கைது செய்யப்பட்டசிறீலங்காவின்  மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும்  சிறீலங்காவின்  இன்றைய நிலமைகள் தொடர்பில் மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர்களால் வினவப்பட்டது.

நீங்கள் குறிப்பிடும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கைது குறித்து நான் அறிவேன். அது தொடர்பில் நடவடிக்கை உண்டு. அனைத்துலக மனிதஉரிமை விவகாரங்களில் மனிதஉரிமை சபையின் ஒப்புதலுக்கு அமைய அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் எனக்கு உள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் நடைமுறைக்கு அமைய நாடுகளுக்கு அனைத்துலகம் ஏற்கத்தக்க உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.அது சாத்தியப்படாத நிலையில் அனைத்துலக தளத்தில் விசாரணைக்கான முன்னெடுப்பு இடம்பெறுகின்றது. தென்சூடான் விவகாரத்தில் ஆபிரிக்க யூனியனின் வழங்கலுக்கு அமைய, அங்கு விசாரணை நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...