Designed by Iniyas LTD
அன்னை பூபதி…
தன்னுயிரை நம் மண்ணிற்காய்
ஒப்படைத்த தியாகத் தாய்..
போராடி பலகளம் கண்டு
உயிர் நீத்த எம்மாவிர்களின்
பட்டியலில்….
அகிம்சை வழியில்
காந்திய தேசத்து
காந்திய வாதிகளிடம் நீதி கேட்டு
நாம் மண்ணில் வீழ்ந்த
வீர தமிழத்தாய்..
விடுதலை தாகத்தையும்,
தாயகப் பற்றையும்
நெஞ்சில் சுமந்த
அன்னை அவள்….
30 ஆண்டுகள் என்ன….
300 ஆண்டுகள் சென்றாலும்
தாயக விடிவிற்காய்
தன்னுயிரீந்த….
மறவர்களையும், மாவீரகளையும்
மறக்காது எம்மவர் நெஞ்சம்…..
