Designed by Iniyas LTD
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை வழங்கும் அமெரிக்கா..
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியினை காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தக் கொடையைப் பயன்படுத்த உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர் குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன், பிரதமர் செயலகம் இறுதிக்கட்டப் பேச்சுக்களை நடாத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.