தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் – சிவிவி

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் அரச தரப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் காக்கைதீவில் புதிதாக அமைக்கப்பட்ட மீன்கூறல் மண்டபத் திறப்பு நிகழ்வில் பங்குகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.Vigneswaran

வடக்கிற்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் தொடர்பில் தெற்கில் இருப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வடக்கிற்கு மட்டும் அதிக உதவிகள் கிடைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கே அதிக உதவிகளை வழங்கவேண்டும் என்று தான் அவர்களுக்கு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

எனவே அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மீளக்குடியேறிய மக்களின் நலனுக்காகப் பணியாற்றுதல் என்ற தொனிப்பொருளில் USAID, அமைப்பின் நிதியுதவியில் JSAC நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட காக்கைதீவில் புதிதாக அமைக்கப்பட்ட மீன்சந்தைக் கான மீன்கூறல் மண்டபம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமெரிக்கத் தூதரால் திறந்துவைக்கப்பட்டது.

இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்ற இத்திறப்பு நிகழ்வில் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆலயத்தின் தூதர் உட்பட்டவர்களும் திறப்பு நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை முக்கியஸ்தர்களும் பங்குகொண்டிருந்தனர்.

Comments
Loading...