Designed by Iniyas LTD
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் தோமஸ் சானோனை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபருடன் சிறிலங்காவின் வெளிவவகாரச் செயலர் பிரசாத் காரியவசமும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான தனது கடைசிப் பயணம் மறக்க முடியாதது என்று தோமஸ் சானோன் குறிப்பிட்டார் என்றும், தனது அடுத்த பயணம் தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடினார் என்றும், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் உதவிகள் குறைக்கப்படாது என்றும் தோமஸ் சானொன் உறுதியளித்துள்ளார்.