தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவின் உத்தேச தீர்மான பிரதி இந்தியாவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

india

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தின் உத்தேச பிரதி இந்தியாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆவணத்தை பார்வையிட்டதன் பின்னரே ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என இந்தியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உத்தேச தீர்மானம் குறித்த ஆவணம் கிடைக்கப்பெற்றுள்ளது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பாருடீன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் இந்த ஆவணத்தை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆவணத்தை உன்னிப்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், வாக்கெடுப்பின் போது எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்பதனை சிறீலங்காவுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...