தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவின் எழுத்து வடிவத்தினை ஆராய்ந்த பின்னரே அது குறித்த நிலைபாட்டினை அறிவிக்க முடியும்- இந்தியா

இலங்கை தொடர்பான பிரேரனையில் அமெரிக்காவின் எழுத்து வடிவத்தினை ஆராய்ந்த பின்னரே அது குறித்த நிலைபாட்டினை அறிவிக்க முடியும் என இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா சென்றுள்ள இலங்கை ஊடகவியளாளர் குழுவொன்று இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் சுஜாதாசிங்கை சந்தித்த வேளையில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.இந்தியா

ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்தி பேரனை ஒன்றினை முன் வைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும் இதன் இறுதி வடிவம் இன்னமும் வெளியாகவில்லை. எனவே இலங்கை தொடர்பில் இன்னும் எந்த தீர்ப்பாயத்தினையும்  மேற்கொள்ளவில்லை என சுஜாதாசிங் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இலங்கை விடையம் தொடர்பில் மனிதவுரிமைகள் பேரனையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஏனைய நாடுகள் எவ்வாறான தீர்ப்பாயத்தினை மேற்கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை இலங்கை அரசாங்கம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையான அமுலாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments
Loading...