Designed by Iniyas LTD
அமெரிக்காவில் சுகமான வாழ்க்கை வாழ்பவர்கள் ஐ.ஐ.டி மாணவர்கள்: மார்கண்டேய கட்ஜூ
ஐ.ஐ.டி. மாணவர்கள் தேசத்தை மறந்து அமெரிக்காவில் சுமகான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், உங்களில் பெரும்பாலானோர் முதலில் எம்.டெக் படிப்பதற்கு என்றுதான் அமெரிக்காவிற்கு செல்கின்றீர்கள். ஆனால் பின்னர் அங்கேயே தங்கிவிடுகின்றீர்கள். இந்திய அரசின் உதவித் தொகையை பெற்று படிக்கின்ற நீங்கள் அமெரிக்காவில் சென்று சுகமான வாழ்க்கை வாழ்கின்றீர்கள்.
அமெரிக்காவில் தங்கிய பிறகு தங்களின் தேசம் குறித்து அனைத்தும் தெரிந்தும், தங்களின் தேச மக்களுக்கு எது நல்லது எது நல்லது இல்லை என்று புரிந்து கொல்வதில்லை என்று கூறியுள்ளார்.