தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – மூன்று பேர் பலி

அமெரிக்காவில் நியூ ஓர்லன்ஸ் புறநகரில் பிரபலமான  பார்  பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மது பாருக்குள் நுழைந்தது  யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென சரமாரியாக சுட்டுள்ளனர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில்  இரண்டு ஆண்கள் மற்றும்    பெண்  ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில்  7 பேருக்கும்  காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காயமடந்தவர்கள்  நியூ ஓர்லியன்ஸ் நகரில் உள்ள  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தியபோது,  மர்ம நபர்கள் 10 பேரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம்  என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...