தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில் பிரபல பாடகர் படுகொலை..

அமெரிக்காவை சேர்ந்த   பிரபல பாடகரான எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் (XXXTentacion) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளோரிடாவின் டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு நடந்து சென்ற எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சனை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா பகுதியைச் சேர்ந்த ஜாஹேஷ் ஆன்ஃப்ராய் (Jahseh Onfroy) என்ற 20 வயது இளைஞர், தனது ஹிப் – ஆப் (hip – op) இசைத் திறமையால் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் (XXXTentacion) என்ற பெயரில் பிரபலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...