தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில் விமான விபத்து – 6 பேர் பலி

அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள துஸ்கலுசா விமான நிலையத்தில் ஒரு குட்டிவிமானம் தரை இறங்கியது. அது இறங்கிய வேகத்தில் ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி சுவற்றில் மோதி தீபிடித்தது.  இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 6 பேரும் உடல் கருகி பலியாகினர்.

இவர்கள் திருமணமான 3 ஜோடி தம்பதிகளாவர். புளோரிடாவில் நடந்த பல் டாக்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆக்ஸ்போர்டு மற்றும் மிஸ்சிசிப்பிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.  விபத்தில் பலியான 3 தம்பதிகளுக்கும் 11 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் இறந்ததால் இவர்கள் அனைவரும் அனாதைகளாகிவிட்டனர். தவறான சிக்னல் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

dead-in-plane

Comments
Loading...