Designed by Iniyas LTD
அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைக்காகவே ஹைட்ரஜன் குண்டு சோதனை: வடகொரிய அதிபர்
அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைக்காகவே ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாக வடகொரியா அறிவித்துள்ளது.
அணுகுண்டு சோதனையைத் தொடந்து ராணுவ தலைமையகத்திற்கு சென்ற வடகொரிய அதிபர் Kim Jong Un, அமெரிக்காவால் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் நீடிப்பதால், தற்காப்புக்காகவே ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவால் ஏற்பட்ட அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வடகொரியாவுக்கு சட்டப்பூர்வமான உரிமை உள்ளதாகவும் இதனை யாரும் விமர்சிக்க முடியாது என்றும் அதிபர் Kim Jong Un தெரிவித்துள்ளார்.