தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வடகொரியா எண்ணம் பலிக்காது-டொனால்டு டிரம்ப்

FORT LAUDERDALE, FL - AUGUST 10:  Republican presidential nominee Donald Trump speaks during his campaign event at the BB&T Center on August 10, 2016 in Fort Lauderdale, Florida. Trump continued to campaign for his run for president of the United States.  (Photo by Joe Raedle/Getty Images)
FORT LAUDERDALE, FL – AUGUST 10: Republican presidential nominee Donald Trump speaks during his campaign event at the BB&T Center on August 10, 2016 in Fort Lauderdale, Florida. Trump continued to campaign for his run for president of the United States. (Photo by Joe Raedle/Getty Images)

வடகொரிய அதிபர் கிம் ஜாங் யங் டெலிவிஷனில் புத்தாண்டு உரை நிகழ்த்தினார். சுமார் 30 நிமிடங்கள் ஆற்றிய உரையில், “வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை தயாரித்து வருகிறது.அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே அந்த ஏவுகணை சோதனை விரைவில் நடத்தப்படும்“ என்றார்.

அவரது இப்பேச்சு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில், “அமெரிக்காவை தாக்கும் அளவுக்கு வடகொரியாவால் ஏவுகணை தயாரிக்க முடியாது. எனவே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வடகொரியா அரசு எண்ணம் பலிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

வடகொரியாவை அணு ஆயுத நாடு என ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா பற்றி டிரம்ப் இதுவரை தனது கொள்கையை அறிவிக்காத நிலை யில் தற்போது தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments
Loading...