Designed by Iniyas LTD
அமெரிக்க உதவி தூதுவர் அன்ரூவ் சிமன் கிளிநொச்சி விஜயம்
இலங்கைக்கான அமெரிக்க உதவி தூதுவர் அன்ரூவ் சிமன் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் அமெரிக்க ஆசிய பசுபிக் பிராந்திய கட்டளை பணியகத்தினால் 52 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் மற்றும் புனரமைக்கப்பட்ட விவசாய,விஞ்ஞான கூடங்கள் ஆகியவற்றை திறந்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார். 
நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல், கரைச்சி கோட்டக்கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் பாடசாலையின் அதிபர் திருமதி மீன லோஜினி மற்றும் அயற் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.