தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், முர்ரே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

us-open-tennisஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, வாவ்ரிங்கா உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 ஒற்றையர் பிரிவில் நடந்த மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில், தொடரின் இரண்டாம் நிலை வீரரான ஃபெடரர், ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ் கிரைபரை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

 நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்த்து ஃபெடரர் விளையாட உள்ளார். இதேபோல், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் உள்ளிட்டோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Comments
Loading...