தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்க – சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இரண்டாவது பேச்சு

அமெரிக்க, சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளுக்கு இடையிலான, இரண்டாவது அதிகாரிகள் மட்டப் பேச்சு நடந்து முடிந்துள்ளது.

கொழும்பிலுள்ள சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இந்தப் பேச்சு கடந்த மே 16, 17ஆம் நாள்களில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் குழுவுக்கு, கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர்  றியர் அட்மிரல்  பியால் டி சில்வா தலைமை தாங்கினார்.

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது பசுபிக் கப்பல் படைப்பிரிவு சார்பிலான அதிகாரிகள் குழுவுக்கு கப்டன் பிரையன் அன்டர்சன் தலைமை தாங்கியிருந்தார்.

இரண்டு நாடுகளினதும் கடற்படைகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது.

Comments
Loading...