Designed by Iniyas LTD
அமெரிக்க பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு! ஏழு பேர் படுகாயம்
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது கொலம்பஸ். அமெரிக்காவின் 15வது மிகப்பெரிய நகரமான இங்கு, உலகப் பிரசித்திப் பெற்ற ஒஹியோ மாநில பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது.
இந்த பல்கலைக்கழத்தில் நேற்று காலை (அமெரிக்க நேரப்படி) துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரும் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டு விட்டனர். மற்றவர்கள் குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வளாகமும் மூடப்பட்டது.