Designed by Iniyas LTD
அமெ.தேசிய பூங்காவில் அரியவகைப் பூ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் மிகவும் அரியவகை மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கலிஃபோர்னியாவில் உள்ள Death Valley என்று அழைக்கப்படும் தேசிய பூங்கா அமைந்துள்ளது. உலகின் மிகவும் வெப்பமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு மிகவும் குறைவான அளவுக்கு மழை பெய்வதால், தாவரங்களைக் காண்பது மிகவும் அரிதாகும்.
எனினும், சில அரியவகைச் செடிகள் இந்த தட்பவெப்பத்திற்கு ஏற்ப சில நேரங்களில் அரிதாகப் பூக்கின்றன. அண்மையில், Death Valley பகுதியில் கனமழை பெய்தது. அதனால், மஞ்சள் நிறத்தில் காட்டுப் பூக்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. மலைச்சரிவையொட்டிய சமவெளிப் பகுதியில் இப்பூக்கள் பூத்து குலுங்குவது, அங்குள்ள மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பூங்காவில் இப்போதுதான் இந்த அளவிற்கு பூக்கள் பூத்திருப்பதாக அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.