தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்பாறையில் முஸ்லிம்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதல்! நடந்தது இதுதான்

அம்பாறை நகரில் அமைந்துள்ள ஹாசிம் ஹோட்டலில் திங்கட் கிழமை இரவு 10.10 மணிக்கு சாப்பிடுவதற்கு இரு சிங்கள இளைஞர்கள் சென்றனர். சாப்பாட்டில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்து கலந்துள்ளது என்று கூறி ஹோட்டல் பணியாளர்களுடன் தர்க்கப்பட்டனர். வாய்த்தர்க்கம் நீடிக்க 10.30 மணியளவில் அவர்கள் அலைபேசியில் வேறு சிலரை அங்கு அழைத்தனர். 7 சிங்களவர்கள் வரையில் அங்கு வந்தனர்.

அவர்களும் கடைப் பணியாளர்களுடன் தர்க்கப்பட்டனர். அங்கு நின்றிருந்த சிங்கள இளைஞர்கள் மேலும் பலரை அலைபேசியூடாக அழைத்தனர். நேரம் 11 மணியாகும் போது, கடைக்கு முன்பாக 50 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். நிலமை மெல்ல மாறத் தொடங்கிளது. கைகலப்பாகி அது கலவரமாக மாறியது. கடையில் பணிபுரிந்த 8 முஸ்லிம் பணியாளர்கள், கடையின் பின்வாசல் ஓடித் தப்பினர்.

சமூக வலைத்தள காணொளி

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
ஹோட்டலின் உரிமையாளர் பர்சித், சிங்களவர்களின் கையில் சிக்குண்டார். ஹோட்டலை முழுமையாக துவம்சம் செய்த சிங்களவர்கள், கடையின் உரிமையாளரின் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தை காணொலியாக சமூகவலைத் தளங்களில் தரவேற்றியுள்ளனர். ஹோட்டலின் உரிமையாளர், உணவில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்து கலக்கின்றது என்று கூறுகின்றார். ஆனால் அந்தக் காணொலியை மிரட்டியே எடுத்தனர் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் கூறினார்.

குவிந்த சிங்களவர்கள்

ஹோட்டலில் மோதல் நடந்து கொண்டிருக்கும் போது ஹாசிம் ஹோட்டலிருந்து 500 தொடக்கம் 750 மீற்றர் தொலைவில் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள ரஹிம் ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாருக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

நேரம் நள்ளிரவு 12 மணியானது. இப்போது பள்ளிவாசல் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் அங்கு குவிந்து விட்டனர். அவர்கள் கைகளில் அலவாங்குகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன. பள்ளிவாசலைத் தாக்கத் தொடங்கினர்.

நகரத்தில் தாக்குதல்

பள்ளிவாசலின் சுற்று மதில் தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் முன்பாக இருந்த ரஹிம் ஹோட்டல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. நகரில் இருந்த மேலும் இரண்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் அடித்து நொருக்கப்பட்டன.

வேறு மாவட்டங்களிலிருந்து அம்பாறைக்கு தொழில் நடவடிக்கையாக வரும் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் உள்ள தங்குமிட அறைகளிலேயே தங்கியிருப்பது வழமை. அவர்கள் தொழிலுக்காக கொண்டு வரும் வாகனங்கள் பள்ளிவாசலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். பள்ளிவாசலை தாக்கிய காடையர்குழு, அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொருக்கியது.

பள்ளிவாசலுக்குள் இருந்த வேறு மாவட்ட முஸ்லிம்கள் திக்குத் திசை தெரியாமல், பள்ளிவாசலின் பின்பாக இருந்த அடர் காட்டுக்குள் ஓடித் தப்பினர். இவர்களை, நேற்று அதிகாலை 5 மணிக்கு அங்கு சென்ற பிரதி அமைச்சர் ஹலீஸ் தலைமையிலான குழுவினரே அவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

2 மணிநேரத்தில் முடிவு

காடையர் குழுவின் வெறியாட்டம் இரண்டு மணி நேரத்தில் முடிந்தது. நேற்று அதிகாலை 1 மணிக்கு அண்மையாகவே பொலிஸாரின் தலைகள் தெரியத் தொடங்கின. அதன் பின்னரே நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலையிலிருந்து பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பள்ளிவாசல், தாக்கி அழிக்கப்பட்ட கடைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் அலுவலர்கள் அச்சம் காரணமாக நேற்றுக் கடமைக்குச் செல்லவில்லை. நேற்று முன்னிரவு வரையில் அந்தப் பகுதியில் பதற்றம் இன்னமும் தணியவில்லை.

நடந்தது என்ன?

அம்பாறை நகரில் உள்ளது ஹாசிம் ஹோட்டல். நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு 10 மணிக்கு இரண்டு சிங் கள இளைஞர்கள் உணவுண்ணச் சென்றனர். முட்டை ரொட்டி வேண்டும் என்று கேட்ட அவர்களுக்கு அது வழங்கப்பட்டது.

தொட்டுச் சாப்பிட ஆனம் (குழம்பு) கேட்டனர். பணியாளர்களும் வழங்கினர். குழம்பை முட்டை ரொட்டியில் ஊற்றும்போது, குழம்பிலிருந்து வெள்ளை நிறத்திலான சிறிய கட்டி விழுந்தது. அந்தக் கட்டி இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்து என்று முரண்பட ஆரம்பித்தனர் அந்த இரண்டு சிங்கள இளைஞர்களும். கடையில் இருந்த பணியாளர்களும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடட்டனர்.

“குழம்பு இறுக்கமாக இருப்பதற்காக கோதுமை மா பயன்படுத்துகின்றோம். கோதுமை மா கரையவில்லை. அதுவே குழம்பிலிருந்து வீழ்ந்தது”- என்று ஹோட்டல் உரிமையாளர் பர்சித் இளைஞர்களுக்கு விளக்க முயன்றார். அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். இதுவே வாய்த்தர்க்கம் உருவாகக் காரணம். பின்னர் அது கலவரமாக மாறியது.

அமைதி காத்த பொலிஸ்
அம்­பாறை நக­ரி­லுள்ள பள்­ளி­வா­ச­லி­லிருந்து 500 மீற்­றர் தொலை­வி­லேயே பொலிஸ் நிலை­யம் உள்­ளது. ஆனால் இத்­தனை சம்­ப­வங்­க­ளும் முடி­யும் வரை அமை­தி­யாக இருந்­து­விட்டு, எல்­லாம் முடிந்த பின்­னரே பொலி­ஸார் வெளியே தலை­காட்­டி­னர் என்று அந்­தப் பகுதி மக்­கள் குற்­றஞ் சுமத்­தி­னர்.

அம்­பாறை நக­ரி­லுள்ள ஹாசிம் ஹோட்­ட­லில் வாய்த்­தர்க்­கம் நடை­பெ­றும் ­போதே – நேற்று முன்­தி­னம் திங்­கட் கிழமை இரவு 10.30 மணி­ய­ள­வில் பொலி­ஸா­ருக்கு தொலை­பே­சி­யூ­டா­கத் தக­வல் வழங்­கப்­பட்­டது. அதன் பின்­னரே ஹாசிம் ஹோட்­டல் தாக்­கப்­பட்­டது.

நள்­ளி­ரவு 12 மணி­ய­ள­வில், பேருந்­து­கள், மோட்­டார் சைக்­க­ளில் வந்­தி­றங்­கிய சுமார் 500 இற்கு மேற்­பட்­டோர் பள்­ளி­வா­சல் உள்­ளிட்ட ஏனைய இடங்­க­ளைத் தாக்­கி­னர்.
இவை இவ்­வ­ள­வும் நடை­பெ­றும்­போது பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு வர­வே­யில்லை.

எல்­லாம் முடிந்த பின்­னரே பொலி­ஸார் அங்கு வந்­த­னர் என்று கூறி­னர் அந்­தப் பகுதி மக்­கள் இது தொடர்­பில் யாரும் முறைப்­பாடு செய்­ய­வில்லை என்­றும், இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தற்­போதே தானும் அறிந்து கொண்­டேன் என்­றும் பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் ருவான் குண­சே­கர தெரி­வித்­தார்.

நன்கு திட்டமிட்ட தாக்குதல்

அம்­பா­றை­யில் நள்­ளி­ர­வில் இடம்­பெற்ற கல­வ­ரம் திடீ­ரென வெடித்த ஒன்­றல்ல. இது மிக நீண்ட கால­மா­கவே திட்­ட­மி­டப்­பட் டது என்­கின்­ற­னர் அந்­தப் பகுதி மக்­கள். அதை நியாப்­ப­டுத்தி 5 கார­ணங்­க­ளை­யும் அவர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

அம்­பாறை நக­ரில் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான பொது­மக்­கள் முன்­ன­ணியே வெற்றி பெற்­றது. தேர்­த­லில் வெற்றி பெற்ற அந்­தக் கட்­சி­யின் நகர சபை உறுப்­பி­னர், நக­ரில் உள்ள பள்­ளி­வா­ச­லின் சுவ­ரில் சுவ­ரொட்டி ஒன்றை ஒரு வாரத்­துக்கு முன்­னர் ஒட்ட முயன்­றுள்­ளார்.

பள்­ளி­வா­சல் நிர்­வா­கத்­தில் உள்ள இளை­ஞன், பள்­ளி­வா­சல் சுவ­ரில் ஒட்­ட­ வேண்­டாம் என்று கேட்­டுள்­ளான். அத­னை­யும் மீறி சுவ­ரொட்டி ஒட்­டப்­பட்­டுள்­ளது. அதை அந்த இளை­ஞன் கிழித்­தெ­றிந்து அகற்­றி­யுள்­ளான்.

இந்­தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, நகர சபை­யின் தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள மகிந்த அணி உறுப்­பி­னர் சுவ­ரொட்­டி­யைக் கிழித்­தெ­றிந்த இளை­ஞ­னைத் தேடித் திரிந்­துள்­ளார். விட­யத்­தைக் கேள்­வி­பட்ட இளை­ஞன் அவரை நேரில் சென்று சந்­தித்­துள்­ளான். பள்­ளி­வா­சல் மதி­லில் எந்­தக் கட்­சி­யி­ன­தும் சுவ­ரொட்­டி­யை­யும் நாம் ஒட்­டு­வ­தற்கு அனு­ம­திப்­ப­தில்லை. அத­னா­லேயே கிழித்­தெ­றிந்­தேன் என்று கூறி­யுள்­ளான். அதனை அவ­ரும் ஏற்­றுக் கொண்­டுள்­ளார்.

ஆனால், நேற்­றைய கல­வ­ரத்­தில் எந்­த­வி­தத்­தி­லும் தொடர்­பு­ப­டாத பள்­ளி­வா­சல் தாக்­கப்­பட்­டது மட்­டு­மல்­லா­மல், பள்­ளி­வா­ச­லின் சுற்று மதில் முழு­வ­து­மாக தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. இது திட்­ட­மிட்ட தாக்­கு­தல் என்­ப­தற்கு நாம் முத­லா­வ­தாக முன்­வைக்­கும் கார­ணம்.

அம்­பாறை நக­ருக்கு அரு­கி­லேயே இறக்­கா­மம் பிர­தே­சம் இருக்­கின்­றது. அங்கு மாயக் கல்லி மலை­யில் புத்­தர் சிலை வைப்­பது தொடர்­பில் அந்­தப் பகுதி முஸ்­லிம் மக்­க­ளு­டன் நீண்­ட­கா­ல­மாக முரண்­பாடு நில­வு­கின்­றது. இறக்­கா­மம் பிர­தே­சத்­தைச் சேர்ந்த வர்த்­த­கர்­க­ளுக்­குச் சொந்­த­மான இரண்டு கடை­க­ளும் இந்­தக் கல­வ­ரத்­தில் அடித்து நொருக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இது திட்­ட­மிட்ட தாக்­கு­தல் என்­ப­தற்கு நாம் இரண்­டா­வ­தாக முன்­வைக்­கும் கார­ணம்.

அம்­பாறை மாவட்­டம் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் கோட்டை. நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் முஸ்­லிம் காங்­கி­ரஸ் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் யானைச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டது. ஆனால் தோல்­வி­ய­டைந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கடந்த ஞாயிற்­றுக் கிழ­மையே சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ரா­கப் பொறுப்­பெ­டுத்­தார். அவர் பொறுப்­பேற்று 24 மணி நேரத்­தி­னுள் இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்­கும், ரணி­லுக்­கும் இடை­யி­லான நெருக்­கத்தை குழப்ப மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­ வேண்­டும். திட்­ட­மிட்ட தாக்­கு­தல் என்று நாம் சந்­தே­கிப்­ப­தற்கு மூன்­றா­வது கார­ணம்.

அம்­பாறை நகர சபை­யில் 9 ஆச­னங்­க­ளைப் பெற்று மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி வெற்றி பெற்­றுள்­ளது. இது­வும் நாம் திட்­ட­மிட்ட தாக்­கு­தல் என்று சந்­தே­கிப்­ப­தற்கு நான்­கா­வது கார­ணம்.

ஹாசிம் ஹோட்­ட­லில் வாய்த்­தர்க்­கம் இடம்­பெ­றும்­போதே பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் சம்­ப­வம் நடை­பெற்று முடிந்த பின்­னரே பொலி­ஸார் வந்­துள்­ள­னர். நடத்­தப்­பட்­டது திட்­ட­மிட்ட தாக்­கு­தல் என்று நாம் சந்­தே­கிப்­ப­தற்கு ஐந்­தா­வது கார­ணம் இது என்று அவர்­கள் கூறி­னர்.

அமைதி காக்குமாறு
அறிவுரை
அம்­பாறை நக­ருக்கு அரு­கி­லுள்ள இறக்­கா­மம் பிர­தே­சத்­தில் முஸ்­லிம் மக்­கள் அமை­தி­காக்க வேண்­டும் என்­றும், எந்­த­வொரு வன்­செ­யல்­க­ளில் ஈடு­ப­ட­வேண்­டாம் என்­றும் அங்­குள்ள பள்­ளி­வா­சல்­க­ளின் ஒலி­பெ­ருக்கி ஊடாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அம்­பாறை நக­ரில் முஸ்­லிம் வர்த்­தக நிலை­யங்­கள், பள்­ளி­வா­சல்­கள் என்­பன எரி­யூட்­டப்­பட்­டன. அம்­பாறை மாவட்­டத்­தில் உள்ள முஸ்­லிம்­க­ளி­டத்­தில் இது பெரும் கொதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அம்­பாறை நக­ருக்கு அடுத்­தாக உள்­ளது இறக்­கா­மம்.
இந்­தப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த இரு­வ­ரது வர்த்­தக நிலை­யங்­க­ளும் அம்­பாறை நக­ரில் அடித்து நொருக்கி எரி­யூட்­டப்­பட்­டுள்­ளன.

இத­னால் இறக்­கா­மம் பிர­தேச மக்­க­ளும் கடும் ஆத்­தி­ரத்­தில் உள்­ள­னர். அந்­தப் பிர­தே­சத்­தில் உள்ள சர்­சைக்­கு­ரிய மாயக்­கல்லி மலை புத்­தர் சிலையை சேத­மாக்க அவர்­கள் திட்­ட­மிட்­ட­னர் என்று தக­வல் பர­வி­யது.

முஸ்­லிம் மக்­களை அமை­தி­காக்­கு­மா­றும், பொறு­மை­யாக இருக்­கு­மா­றும், எந்­த­வொரு வன்­செ­யல்­க­ளி­லும் ஈடு­ப­ட­வேண்­டாம் என்று அங்­குள்ள பள்­ளி­வா­சல்­கள் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சமுக வலைத்தளங்கள்
ஊடாக பரவும் கருத்துக்கள்

முஸ்­லிம் உண­வ­கங்­க­ளில் இன­வி­ருத்­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் மருந்­து­கள், அங்கு தயா­ரிக்­கப்­ப­டும் உண­வு­களுடன் சேர்க்­கப்­ப­டு­கின்­றன என்று கடந்த சில மாதங்­க­ளா­கவே சமூக வலைத் தளங்­க­ளில் செய்­தி­கள், காணொ­லி­கள் பரி­மாற்­றப்­ப­டு­கின்­றன.

இன­வி­ருத்­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் மருந்­து­கள், பதார்த்­தங்­களை தாம் தயா­ரிக்­கும் உண­வு­க­ளில் உள்­ள­டக்­கு­கின்­ற­னர். திட்­ட­மிட்ட ரீதி­யில் தமிழ், சிங்­கள மக்­க­ளின் இன­வி­ருத்­தியை கட்­டுப்­ப­டுத்­து­கின்­ற­னர். இதே­போன்று முஸ்­லிம் புட­வை­ய­கங்­க­ளில் உள்­ளா­டை­க­ளி­லும் இதே­போன்று இன­வி­ருத்­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் பதார்த்­த­தைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர் என்ற கருத்­துக்­கள் சமூக வலைத் தளங்­க­ளில் கடந்த சில மாதங்­க­ளா­கப் பரப்­பட்டு வந்­தது.

சிங்­க­ள­வர்­க­ளி­டத்­தில் மாத்­தி­ர­மின்றி, தமி­ழர்­க­ளின் சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் இந்­தக் கருத்து தொடர்ச்­சி­யா­கப் பரப்­பட்டு வந்­தது. அம்­பா­றை­யில் முஸ்­லிம் உண­வ­கத்­தில் இதே­போன்­ற­தொரு மருந்து கலக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்தே கல­வ­ரம் ஆரம்­ப­மா­னது.

கடைப் பணியாளர்களை
காத்த சிங்களக் குடும்பம்
அம்­பாறை நக­ரில் சிங்­க­ள­வர்­க­ளால் தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட நிலை­யில், நக­ரி­லி­ருந்த வர்த்­தகர்கள் சிலரை தாக்­கு­த­லா­ளி­க­ளி­ட­மி­ருந்து சிங்­க­ளக் குடும்­பம் ஒன்றே பாது­காத்­தது.

சிங்­க­ளக் குடும்பத்­தின் பாது­காப்­பில் இருந்த அவர்­கள் நேற்று அதி­காலை தமது ஊருக்­குப் பாது­காப்­பா­கச் சென்­று­ விட்­ட­னர்.

அம்­பாறை நக­ரில் நேற்று முன்­தி­னம் திங்­கட் கிழமை இரவு சிங்­கள இளை­ஞர்­க­ளால் பள்­ளி­வா­சல் மற்­றும் ஹோட்­டல்­கள் உடைத்து நொருக்­கப்­பட்­டது. முஸ்­லிம் ஹோட்­ட­லில் பணி­யாற்­றிய சிலரை, நக­ரி­லுள்ள சிங்­க­ளக் குடும்­பத்­தி­னர் பாது­காப்­பாக அழைத்­துச் சென்று தம்­மு­டன் தங்க வைத்­துள்­ள­னர்.

நக­ரப் பகு­தி­யில் பொலிஸ் பாது­காப்பு போடப்­பட்டு, முஸ்­லிம்­கள் அங்கு வந்த பின்­னரே, ஹோட்­டல் பணி­யா­ளர்­கள் சிங்­க­ளக் குடும்­பத்­தின் பாது­காப்­பி­லி­ருந்து வெளி­வந்து தமது ஊருக்­குச் சென்­றுள்­ள­னர்.

உணவால் கருத்தடை
சாத்தியமில்லாதது

நிரந்­த­ர­மாக இன­வி­ருத்­தி­யைத் தடை செய்­யும் வித­மா­கவோ அல்­லது கருத்­தடை ஏற்­ப­டுத்­தும் வித­மா­கவோ எந்­த­வித மருந்­து­க­ளும் இது­வரை உல­கில் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

உண­வி­லும், உடை­க­ளி­லும் அவ்­வா­றான இர­சா­ய­னங்­கள் சேர்க்­கப்­ப­டு­கின்­றன என்று கூறப்­ப­டும் கருத்­துக்­கள் இன­வாத சிந்­த­னை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டவை.

இவ்­வாறு சிறப்பு மருத்­து­வர் நிபு­ணர் ஆரி­ய­சேன யூக­மகே தெரி­வித்­துள்­ளார். இதே கருத்­தையே, யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யின் மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணர் ஒரு­வ­ரும் ‘உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம்’ தெரி­வித்­தார்.

“உணவு, உடை­யில் கலந்து கருத்­தடை, இன விருத்தி இல்­லா­மல் செய்­யப்­பட்­டமை தொடர்­பில் உல­கில் இது­வரை எந்­தச் சம்­ப­வ­மும் பதி­வா­க­வில்லை.

கருத்­தடை மாத்­தி­ரை­கள் இரண்டு வகை­யில் உள்­ளன. ஒரு நாளுக்கு மாத்­தி­ரம் செயற்­ப­டும் வகை­யி­லா­னது ஒன்று. மற்­றை­யது, 72 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மாத்­தி­ரம் செயற்­ப­டும் வகை­யி­லா­னது.

ஒரு நாள் மாத்­தி­ரம் செயற்­ப­டும் மாத்­தி­ரையை ஒவ்­வொரு நாளும் உட்­கொண்­டாலே கரு உற்­பத்­தி­யா­வ­தைத் தடுக்­க­லாம். இடை­யில் இரண்டு அல்­லது மூன்று நாள்­க­ளுக்கு அதனை உட்­கொள்­ளாது உற­வு­கொண்­டா­லும் கரு உற்­பத்­தி­யா­க­லாம்.

அவ­சர நிலை­க­ளின்­போது பயன்­ப­டுத்­து­வ­து­தான் 72 மணித்­தி­யா­லங்­கள் இயங்­கு­தி­றன்­கொண்ட மாத்­திரை. இது உண­வு­டன் உட்­கொண்­டா­லும் குறித்த மணித்­தி­யா­லங்­க­ளுக்­குப் பின்­னர் அதன் செயற்­தி­றனை இழந்­து­வி­டும்.”-என்று மருத்­துவ நிபு­ணர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

ஐ.நாவுக்கு
கொண்டு செல்லப்படும்
அம்பாறை முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு அரசு உடன் பொறுப்புக் கூறல் வேண்டும். இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை ஜெனீவா மனித உரிமைகள் சபையின் சிறப்புக் கரிசனைக்கு உட்படுத்தும் செயல்முறையில் எமது அமைப்பு தொடர்ந்தும் பயணிக்கும்.

இவ்வாறு யாழ்ப்பாண பன்னாட்டு முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது-
அம்பாறை முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இனவாதத் தாக்குதலை யாழ்ப்பாணம்,பன்னாட்டு முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தையும் சமாதானச் சூழலையும் சீர்குலைக்கும் திட்டமிட்ட இனவாதச் செயற்பாடாகவே இதனை யாழ்ப்பாணம் பன்னாட்டு முஸ்லிம் சமூகம் நோக்குகிறது.

வன்முறைக்கு காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யவேண்டு. சட்டம் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் செயற்படுவதை அரசு உறுதிப்படுத்தவேண்டும்
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 37 வது கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரசுக்கு ஏற்புடையதல்ல.

இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும், இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை ஜெனீவா மனித உரிமைகள் சபையின் சிறப்புக் கரிசனைக்கு உட்படுத்தும் செயல்முறையில் எமது அமைப்பு தொடர்ந்தும் பயணிக்கும்.- என்றுள்ளது.

Comments
Loading...