Designed by Iniyas LTD
அம்பாறை – நிந்தவூர் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள்,அங்கிகள் மீட்பு..
அம்பாறை – நிந்தவூர் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று சனிக்கிழமை பிற்பகல் நிந்தவூரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.
அத்தோடு பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் சாய்ந்துமருதுப் பகுதியில் மீட்கப்பட்ட வாகனமும் இன்று மீட்கப்பட்ட வாகனமும் ஒரே மாதிரியான வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறீப்பிடத்தக்கது..