Designed by Iniyas LTD
அம்பாள்புரம் கிராம மக்களது வயல் காணி பிரச்சினைக்கு தீர்வு…
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட அம்பாள்புரம் கிராம மக்கள் தமது காணிகளை மீளவும் தமக்கு தெரியாது வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அந்த காணிகள் தவறான முறையில் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீளவும் தம்மிடம் பெற்றுதருமாறும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் 5.2.2019 அன்று காலை 9 மணி முதல் மாலை வரை மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதிருந்த காணிப்பினக்குகளை தீர்க்கும் முகமான நடமாடும் சேவையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந.றஞ்சனா தலைமையில் இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் மாகாண காணி ஆணையாளர் திரு பொ.குகநாதன் உதவி காணி ஆணையாளர் திரு கை.மகேஸ்வரன் மாகாண காணி திணைக்கள காணி உத்தியோகத்தர் திரு செ.சண்முகநாதன் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு குறித்த பிணக்குகள் தொடர்பில் ஆராய்ந்து பிரச்சனைக்கு தீர்வு வழங்கியுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட அம்பாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 252 குடும்பங்கள் வசித்து வருவதோடு இவர்களில் 80 குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருவதோடு 38 பேருக்கு வண்டியன்குளத்தின் கீழ் வயல் நிலங்கள் காணப்படுகிறது ஏனைய விவசாய குடும்பங்கள் வயல் நிலங்கள் இன்றி தமது வாழ்வாதாரத்துக்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்
இவர்களது துன்பநிலமைகளை கருத்தில் கொண்டு 1993 ம் ஆண்டு பொருண்மிய மேன்பாட்டு நிறுவனம் அந்த காலத்தில் இருந்த பிரதேச செயலாளர் ஊடாக பிரதேச செயலாளரால் 40 குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் வீதம் அம்பாள்புரம் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் வயல்களை செய்கைபன்னி வந்தனர்.
இருப்பினும் நாட்டில் இடம்ப்பெற்ற யுத்தம் காரணமாக அனைத்து உடமைகளையும் இழந்து சென்ற மக்கள் மீள்குடியேறிய தற்போதைய காலத்தில் குறித்த காணியை மீள்குடியேற்றத்தின் பின் அயல் கிராமமான கொல்லவிளாங்குளம் பகுதியில் நடமாடும் சேவை நடத்தி குறித்த காணிக்கு போமிட் வழங்கியுள்ளார் இதனால் ஏற்கனவே செய்கைபன்னிவந்த விவசாயிகள் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்தி எமது வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரினர்
அத்தோடு திட்டமிட்டு தாங்கள் மலையக மக்கள் என்பதால் பழிவாங்கப்படுவதாகவும் அம்பாள்புரம் என்ற அடையாளத்தை குறிக்கும் பெயர்பலகையை கூட திட்டமிட்டு காணி அபகரிப்புக்காக வேறு இடத்தி போட்டுள்ளதாகவும் தயவு செய்து தமக்கான நிலத்தை பெற்று தந்துதவுமாறு சம்மந்தப்பட்ட அனைவரையும் தொடச்சியாக வலியுறுத்தி வந்தனர்
இதற்கமையை நடமாடும் சேவை ஊடாக தமக்கு காணி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர் .



