தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்புலன்சில் 20 இலட்சம் ரூபா கஞ்சா கடத்தல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள படேரு பகுதி வழியாக ஏராளமான கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட ஆயத்தீர்வை மற்றும் கலால் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, படேரு பகுதியில் உள்ள சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன போக்குவரத்தை பொலிஸ்சார் கண்காணித்து வந்தனர். அப்போது, இரவு நேரத்தில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் பொலிசார் வழிமறித்தும் நிற்காமல் சென்று விட்டது.aumpulans

கலால் பொலிசாரும் காரில் பின் தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸை விரட்டிச் சென்றனர். எதிர் திசையில் இன்னொரு பொலிஸ் வாகனம் வருவதை கண்டு மிரண்டுப் போன ஆம்புலன்ஸின் டிரைவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, இருளில் தப்பியோடி மறைந்து விட்டான்.

அந்த ஆம்புலன்ஸை சோதனையிட்ட பொலிசார், உள்ளே இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

விசாகப்பட்டனம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தியதாக ஆம்புலன்ஸ் பிடிபட்டது இதுவே முதல் முறை என்று கூறிய அவர்கள் பிடிபட்ட ஆம்புலன்ஸ் பெட்டபாயுலு பகுதியை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்தது என்பதை கண்டறிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Comments
Loading...