தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்மா ஆணையிட்டால் பிரச்சாரம் செய்ய தயார்!

ammaaஜெய­ல­லிதா ஆணை­யிட்டால் சட் டப் பேரவைத் தேர்­தலில் பிர­சா­ரத்­துக்கு தயார் என மதுரை ஆதீனம் அரு­ண­கி­ரி­நாதர் தெரி­வித்துள் ளார்.

கடந்த மக்­க­ளவைத் தேர்­தலில் அ.தி.­மு.­க­.வுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் 40 தொகு­தி­க­ளுக்கும் சென்று பிர­சாரப் பொதுக்­கூட்டங்களில் பேசினார்.

இந்நிலையில் தற்போது சட்­டப் ­பே­ரவைத் தேர்தலில் ஜெய­ல­லிதா அழைத்தால் பிர­சாரம் செய்வேன் என தெரி­வித்துள்ளார். ஆனால், அ.தி.மு.க. தலைமை மதுரை ஆதீ­னத்தை கண்­டு­கொள்­ளவே இல்லை என கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், கூட்­டு­றவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்­று­முன்­தினம் கட்­சியின் முக்­கிய நிர்­வா­கி­க­ளுடன் மதுரை ஆதீ­னத்தை அவ­ரது மடத்தில் சென்று சந்­தித்து, அவ­ரிடம் ஆசி பெற்றார்.

மதுரை ஆதீனம் இது தொடர்பில் தெரி­விக்­கையில், சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லை­யொட்டி அமைச்சர் என்­னிடம் ஆசி பெற வந்தார். தேர்­தலில் அ.தி.மு.க.வுக்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்ய ஆவ­லாக இருக்­கிறேன். அ.தி.மு.க. தலை­மைக்­க­ழகம் அழைத்தால் பிர­சா­ரத்­துக்கு புறப்­படத் தயார் என்றார்.

ஜெயலலிதாவிடமிருந்து தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்ய ஆதீனத்துக்கு அமைச்சர் மூலம் அழைப்பு வந்தி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...