Designed by Iniyas LTD
அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கையில் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் கொடுக்கும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவை ரத்து செய்யுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் விவசாய காப்புறுதிச் சபைக்கும் இடையே கைச்சாத்தான உடன்படிக்கைக்கு முரணாக அரசாங்கம் ஓய்வூதிய வயதை உயர்த்தியுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அந்த ஒப்பந்தத்தின் படி, 60 வயதானதும் விவசாயிகளின் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கம் அந்த வயதை 63 ஆக உயர்த்தியுள்ளமை தவறு. இதனால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அகில இலங்கை விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.