தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை…

இலங்கையின் சகல தரப்பினரையும் அரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் அவசர கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளன.

இது தொடர்பில் அவை  அறிக்கை ஒன்றையும்  வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும்,

ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் ஸ்தானிகர் ஆகியோர் வெளியிட்டு மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

மேலும் அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன் பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்துக்கு மதிப்பாளிக்குமாறும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் உட்பட பல நாட்டு தூதுவர்கள் நேற்று மாலை   ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...