தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் பட்டினிப்போராட்டம் தொடர்கிறது!

ce23df85-f4db-4ee0-b6da-162a8d4e99b91நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணைக­ளின்றி சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் உண்­ணா­வி­ரத போராட்­ட­மா­னது நேற்று நான்­கா­வது நாளா­கவும் தொடர்ந்தது. அந்தவகையில் மகசின் சிறைச்சாலையில் மூன்று கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அந்­த­வ­கையில் கொழும்பு மகசின் சிறைச்­சா­லையில் நீண்­டக்­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஒரு பெண் ­கைதி உட்­பட 14 அர­சியல் கைதி­களும் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் கடந்த ஏழு வரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இரண்டு அர­சியல் கைதிகளுமே இவ்­வாறு கடந்த நான்கு நாட்­க­ளாக உண்­ணா­வி­ரத போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

கொழும்பு மகசின் சிறைச்­சா­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வந்த 15 கைதி­களை நேற்று முன் தினம் சிறைச்­சா­லைகள் திணைக்­களம் நீதி­மன்றத்தில் ஆஜர் செய்­தது. குறித்த கைதி­களில் ஒரு­வ­ரான செல்­லத்­துரை கிரு­பா­னந்தன் என்ற கைதி தான் கடந்த ஏழு வரு­டங்­க­ளாக எவ்­வித குற்­ற­சாட்­டு­க­ளு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக நீதி­மன்றில் குறிப்­பிட்டார். இது தொடர்பில் ஆராய்ந்த நீதி­மன்றம் அவரை மட்டும் நேற்று முன்­தினம் விடு­தலை செய்­யது.

இந்நிலையில் ஏனைய 14 தமிழ் கைதிகள் உள்­ள­டங்­க­லாக அனு­ரா­த­பு­ரச் சிறைச்சாலையின் இரண்டு கைதி­களும் தொடர்ந்து உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­படுகின்றனர். மகசின் சிறைச்­சா­லை­ கைதி­க­ளான பால­சிங்கம் மனோ­கரன், யோசப் செபஸ்ரியான், கார்­டினல் சிங்கம் தயா­பரன் ஆகி­யோரின் உடல் நிலை­யா­னது கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டதை தொடர்ந்து நேற்­றைய தினம் அவர்கள் சிறைச்­சா­லைகள் வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் கடந்த 2009ஆம்ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முதல் எவ்­வித குற்­ற­சாட்­டு­க­ளு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளான யாழ்.கர­வெட்டி வடக்கு கர­ண­வாயைச் சேர்ந்த மதி­ய­ரசன் சுலக்சன், நாவ­லப்­பிட்டி மக்­கும்­ப­ரவைச் சேர்ந்த கணேசன் சந்­திரன் உள்­ளிட்ட கைதிகள் தொடர்ந்து நான்கு நாட்­க­ளாக உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் நிலையில் இவர்கள் இரு­வரும் தூக்கு தண்­டனை கைதி­களை தடுத்து வைக்கும் சிறைச்­சாலை அறைக்கு மாற்­றி­யுள்­ள­தாக தெரிவிக்­கப்­ப­டு­கின்­றது.

Comments
Loading...