தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லையில் மாபெரும் கவனயீர்ப்புக்கு அழைப்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட வன்னிக்குரோஸ் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது

குறித்த போராட்டமானது எதிர்வரும் 05.10.2018 அன்று வெள்ளிக்கிழமை காலை  9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெறவுள்ளது

இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு அரசியல் கைதிகளான எமது உறவுகளின் விடுதலைக்காக போராட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Comments
Loading...