தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில் கையெழுத்து போராட்டம்!

photo-6-1-450x253பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இந்த கையெழுத்து  திரட்டும் நடவடிக்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய  இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்  பேரூந்து தரிப்பிடத்தில்  காலை 11 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி  நாடலாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகளை  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான  தேசிய  இயக்கம் முன்னெடுத்துவருகின்றது.

அந்தவகையில், அரசியல் கைதிகளை  விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த செப்ரெம்பர்  மாதம் 7 ஆம் திகதி குறித்த கையெழுத்து திரட்டும்  நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாவது போராட்டம் மன்னாரில்  இடம்பெற்றதுடன், மூன்றாம் கட்ட நடவடிக்கைகள்யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம்   24  ஆம் திகதி இடம்பெற்ற எழுக தமிழ்  பேரிணியின்போதும்முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் தினங்களில் கையெழுத்து போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக  ஏற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்தார்.

Comments
Loading...