தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கூடாதென அல் ஹூசெய்ன் சொல்லவில்லை!

rupert-colvis_CI
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரவில்லை அவரது பேச்சாளர் ரொபாட் கொல்வில்லி தெரிவித்துள்ளார்.
அல் ஹூசெய்ன் அரசியல் கைதிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பிழையாக அல்லது திரிபுபடுத்தப்பட்ட அடிப்படையில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை, அல் ஹூசெய்ன் நிராகரித்தார் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
 
அல் ஹூசெய்ன் பொது மன்னிப்பு வழங்கும் யோசனையை நிராகரித்தார் என தெற்கு ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுத்து கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றே அல் ஹூசெய்ன் சுட்டிக்காட்டியிருந்தார் என கொல்வில்லி தெரிவித்துள்ளார்.
 
குற்றச்சாட்டுக்கள் எதனையும் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாவிட்டால் அவ்வாறானவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென அல் ஹூசெய்ன் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Comments
Loading...