தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் தீர்வு ஏற்படாமல் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது – சாள்ஸ் நிர்மலநாதன்

நாட்டில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படாமல்  நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது என   தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள தேசிய பிரச்சினைக்கு ஒரு அரசியல்  தீர்வை கொடுப்போம் என ஜனாதிபதி  வழங்கிய வாக்குறுதியுடனே  நல்லாட்சி அரசு அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம்   மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதோடு தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்காது என்றும், உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பிற்பாடு அரசியல் யாப்பு தொடர்பான முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பிற்பாடு இலங்கையை ஆட்சி செய்கின்ற பிரதான இரு கட்சிகளும் தேர்தலின் போது மக்களின் ஆணையை பெறவில்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

 

Comments
Loading...