தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் நோக்கங்களிற்காக    இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல என கூறியுள்ளார் ஜனாதிபதி

இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களும அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவுத் தூபியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இராணுவத்தினரின் கீர்த்தியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட மின்சாரக் கதிரைகளையும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருவதையும் நல்லாட்சி  அரசாங்கம் நிறுத்தியுள்ள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இராணுவத்தில் இருந்த சிலர் வேறு சில நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கைது செய்யப்பட்டதாகவும்,   அது இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடல்ல என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் , எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களிற்காக    இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல என்றும்  ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...