Designed by Iniyas LTD
அரசு முறை சுற்றுப்பயணமாக ஆப்பிரிக்கா சென்ற ஹமீது அன்சாரி
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான மொராக்கோ மற்றும் துனிசியாவிற்கு சென்றுள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக மொராக்கோ சென்றார். மொராக்கோ பிரதமர் அப்தேலில்லாஹ் பென்கிரானேவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு செல்லும் அவர், அங்குள்ள ராபத் நகரில் இந்திய-மொராக்கோ தொழில் மற்றும் வர்த்தக வளாகத்தை தொடங்கி வைத்துள்ளார்.
மொராக்கோ பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இருவரும் கூட்டாக இதனை தொடங்கி வைத்தனர். இரு நாடுகளிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் இந்த சேம்பர் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அன்சாரி, “உலகம் மாற்றமடைந்து, உலகமயமாக்கல் ஆகியுள்ளதாகவும் இந்த நேரத்தில் இதுபோன்ற அமைப்புகள் தேவை என்றும் வலியுறுத்தினார். இது மொராக்கோ செய்தி தொடர்பாளர் கூறியதாவது: 2015-ம் ஆண்டு இருநாடுகளிடையே வர்த்தம் 1.26 பில்லியன் டாலராக இருந்தது.
இந்தியாவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக மொராக்கோ உள்ளது. இந்திய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் சுமார் 320 மில்லியன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனியார் துறையை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தனியார் துறை உலக அளவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்துகிறது. இவ்வாறு குறிப்பிட்டார். மொராக்கோ பயணத்தை முடித்த பிறகு, ஜூன் 2-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை துனிசியாவில் அன்சாரி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.