தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரச அதிகாரிகள் தம்மை புறக்கணிப்பதாக பிரதேச சபை தவிசாளர்கள் குற்றச்சாட்டு..

அரச அதிகாரிகள் தம்மை புறக்கணிப்பதாக பிரதேச சபை  தவிசாளர்கள் கூட்டாக    குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டபுதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம தயானந்தன்  ஆகியோர் ஊடக சந்திப்பினை நடத்தி தங்கள் குற்றச்சாட்டினை   தெரிவித்துள்ளார்கள்.

 முல்லைத்தீவு மாவட்டமாந்தை கிழக்கு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர்களின் ஊடக சந்திப்பு ஒன்று  15.02.19 அன்று ஒட்டுசுட்டான்புதுக்குடியிருப்பு பிரதேச சபை  உப அலுவலகத்தில்  நடத்தியுள்ளார்கள்.

அவர்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில்

நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 16.0219 அன்று நடைபெறவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச சபையின் தவிசாளர்கள் நால்வரும் இணைந்து இன்று காலை ஊடக சந்திப்பிற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்

இந்த தகவல் அறிந்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியா தவிசாளர்களை அழைத்து நாளை நடைபெறும் பிரதமர் நிகழ்விற்கு தவறுதலாக அழைக்கப்படாமைக்கு வருத்தம் தெரிவித்து அவர்களுக்கான அழைப்பினை விடுத்துள்ளார்.

இதன் பின்னர் திடடமிடடபடி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம தயானந்தன்  ஆகியோர் ஊடக சந்திப்பினை நடத்தி தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ந.நந்தகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது..

நாளைய 16.02.19 நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் பிரதேச செயலாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊடகந்திப்பனை நடத்துவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே இந்த அழைப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.

நாங்கள் மாவட்ட செயலாளருக்கும் திட்டதிடல் அதிகாரிக்கும் இதனை சுட்டிக்காட்டியுள்ளோம் பிரதேச செயலக அதிகாரிகளால் கௌர உறுப்பினர்கள் நிகழ்வுகளுக்கு செல்லும் பொழுது கௌரம் அளிக்கப்படாது அவர்கள் ஏன் வருவதாக கேள்விகளை கேட்கின்றார்கள்.

ஜனநாய நாட்டில் ஒரு பதவிநிலை ஒழுங்கு முறை ஒன்று இருக்கின்றது. ஜனாதிபதி,பிரதமர்,மாகாணத்தில் முதலமைச்சர் அதேபோல் பிரதேசத்தில் பிரதேச தவிசாளர்கள் கௌரவப்படுத்தப்படவேண்டியவர்கள் மக்கள் பிரதி நிதிகள் பிரதேச சபை திணைக்களத்தின் தலைவர்கள்.

போராலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைவருடனும் சேர்ந்து மக்களின் அபிவிருத்திகளை நிறைவேற்றுவதற்காக நான்கு பிரதேச சபையின் தவிசாளர்களும் ஓடி உழைத்த வண்ணம் இருக்கின்றோம் நாளை 16) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பிரதமர் அவர்கள் வருவதற்கான நிகழ்விற்கு அழைக்காதத்திற்க தவிசாளர்கள் நால்வரும் இணைந்து பத்திரிகை சந்திப்பினை ஏற்படுத்தி இருந்தோம் அதன் பின்னர் தான் மாவட்ட செயலகத்தில் இருந்து தொலைபேசி வந்துள்ளது அதன் பின்னர் நாங்கள் மாவட்ட செயலத்திற்கு எங்கள் நிலைப்பாட்டினை தெரியப்படுத்தியுள்ளோம் அது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் தவறு என்று கூறி எங்களுக்கான அழைப்பு கடிதங்களை நால்வருக்கும் வழங்கியுள்ளார்கள்.

இதன் பின்னர் பத்திரிகை சந்திப்பிற்காக அழைத்த ஊடக நண்பர்களை ஓரம் கட்டிவிட்டு செல்வதற்காக விரும்பவில்லை அதனால் நடந்த நிகழ்வுகளை தெரிவிக்கவேண்டும் என்று ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்த ந.நந்தகுமார்.

இனிவரும் காலங்களில் பிரதேச செயலகங்கள் பிரதேச  சபைகள்  புட்டு தேங்காய்ப்பூ போல் செயற்படவேண்டிய காலம் இருந்தும்  பிரதேச செயலகங்களில் கௌரவ தவிசாளர்கள் கௌரவ உறுப்பினர்கள் கன்னியமாக அவர்களுடன் இணைந்து பிரதேச அபிவிருத்தியில் செயற்படவேண்டும்

தவிசாளர்களுக்கும் பிரதேச சபைக்கும் உடைய அதிகாரங்கள் இருக்கின்றன எங்களின் திட்டங்களையும் மீளக்குடிமர்கின்ற காரணத்தால் பிரதேச செயலகங்கள் செய்கின்றார்கள் நாங்கள் ஒத்துளைக்கின்றோம் எதிர்வருகின்ற காலங்களில் சபையின் உடைய அதிகாரத்திற்குட்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு முடிவினை எடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

கரைதுறைப்பற்று,புதுக்குடியிருப்பு,மாந்தை கிழக்கு பிரதேசங்ககளில் கௌரவ உறுப்பினர்கள் தங்களுக்கு அநீதி இளைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள். மாந்தை கிழக்கில் கௌரவ உறுப்பினர்கள் கிராம சக்தி திட்டத்திற்கு செல்கின்ற போதும் வீட்டுத்திட்டத்தினை சென்றபோதும் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் இவர்கள் ஏன் வந்தார்கள் என்று கேட்கின்றார்கள் மக்களிடம் சொல்கின்றார்கள் கௌர உறுப்பினர்களை வைத்தே வேலைகளை செய்யுங்கள் என்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் பிரதேச சபையின் ஆட்சி அரச அதிகாரிகள் அரச திணைக்களங்கள் எங்களை மாற்றான் தாய் முகத்தினை பார்ப்பது போல் பார்க்கின்றார்கள் இந்த ஊடக சந்திப்பினை ஏற்படுத்துவதற்கு காரணம் தொடர்ந்து இவ்வாறான அநீதிகளை கௌரவங்களை எங்கள் சுயமரியாதைகளை இழந்து செல்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் வடமகாண ஆளுனர் அவர்களை நான்கு தவிசாளர்களும் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம்

தவிசாளர்கள் அந்த பிரதேசத்தில் அவர்கள் ஒரு முதல் மனிதன் அரச திணைக்களங்களில் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கன்னியத்தினை அதிகாரிகள் வழங்கவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் மக்களுக்கான அபிவிருத்திகளை செய்யமுடியாது இது தொடர்பில் பல முறை தெரியப்படுத்தியுள்ளோம்.

இதேவேளை இந்த மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு கட்சி பேதம் இன்றி அரசியல் பேதம் இன்றி வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியினை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மாகாண அமைச்சின் உடைய செயலாளர்களுடன் நேரடியாக சந்தித்துள்ளோம் சந்திகவும் உள்ளோம் எங்களின் நோக்கம் மக்களின் அபிவருத்தி இதற்கு எங்களை ஓரம் கட்டிவிட்டு அரச அதிகாரிகளால் மட்டும் செயல்படுத்த முடியாது

செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தினை பார்த்தால் சபையின் ஆட்சியல்ல ஆணையாளரின் கீழ் உள்ள ஆட்சிபோலத்தான் அரச அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். இது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அரசியல் பிரதிநிதிகளை எவ்வாறு கையாள்வது நடந்துகொள்வது என்று உள்நாட்டு அலுவல்கள்அமைச்சருக்கு கடிதம் நான் எழுதியுள்ளோன்

மக்களின் அபிவிருத்தியினை கன்னியமாக செய்வதற்கு நான்கு பிரதேச சபையின் தவிசாளர்களும் இன்று வினையமாக செயற்படுகின்றோம் அதற்கு இந்த மாவட்டத்தனை சேர்ந்த அரச திணைக்களங்கள் பலவிதமான எங்களுடன் ஒத்து போகவேண்டும் என்று பலமுறை வினவிஇருந்தோம் தற்போது முடியாத நிலையில் ஊடகத்திற்கு இந்த கருத்தினை தெரிவித்துள்ளோம்.

நாளைய நிகழ்வு தொடர்பில் இறுதி நேரத்தில் கிடைத்த அழைப்பினை தொடர்ந்து நாளைக்கு நாங்கள் செல்வதா இல்லையா என்று முடிவெடுக்கவுள்ளோம் என்றும் இன்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்கள்.

Comments
Loading...