தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரபு நாட்டில் தவிக்கும் 23 மீனவர்களை காப்பாற்ற மோடிக்கு கடிதம்!

7d832b1b-cc4e-4966-9273-5e9b2a741078_S_secvpfம.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக 23 மீனவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அஜ்மன் நகருக்குச் சென்றார்கள். கடுமையான உழைப்போடு பொருளீட்டி தங்களையும், தங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு இன்னல்களைக் கடந்து கனவுகளோடு சென்றவர்களின் வாழ்வில் இடி விழுந்தது போன்று அங்கு நடந்த சம்பவம் அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பெரிய இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.

அரபு நாடுகள் சட்டப்படி மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், அரபு நாட்டைச் சார்ந்த 2 மீனவர்கள் 1-4-2014 அன்று தங்களுடன் அழைத்துச் சென்றனர். எதிர்பாராத விதமாக 14-4-2014 அன்று இரவில் மீனவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது அரபு நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்.

அந்த நாட்டு சட்டப்படி தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் இரக்கமில்லாமல் தாக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்கள் அப்பாவிகள் என்று முடிவு செய்து வழக்கில் சாட்சிகளாக மட்டும் சேர்க்கப்பட்டார்கள்.

காவல்துறையின் நடவடிக்கையால் மீனவர்கள் அனைவரும் தங்கள் வேலையை இழந்தனர். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. உண்ண உணவின்றி, உடையின்றி, வேலையின்றி, செலவுக்குப் பணமின்றி வீட்டு காவலில் வைத்துள்ளதுபோல அவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கடல் கடந்து வாழும் நமது தமிழர்கள் ஸ்டாலின் பீட்டர் என்பவர் மூலமாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் பரிதவித்து வரும் அவர்களை காப்பாற்றிடக்கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

வைகோ இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளி விவகாரத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கும் மனிதாபிமானத்தோடு விரைந்து நடவடிக்கை எடுத்து, வாழ வழியின்றித் தவிக்கும் 23 மீனவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியை உடனடியாக எடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

கவலையோடு, இருண்ட எதிர்காலத்தோடு, கண்ணீரோடு தவிக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நம்பிக்கை ஒளியை ஊட்டிட ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...