Designed by Iniyas LTD
அருட்தந்தை எழில்ராஜனுக்கு துன்புறுத்தல்!
நினைவுகூரலுக்கு ஏற்பாடு செய்த எழில்ராஜனுக்கு துன்புறுத்தல்! – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்
போரில் இறந்து போன தமது உறவுகளை நினைவு கூருவதற்கு பொதுமக்களுக்கு உதவியதற்காக அருட்தந்தை எழில்ராஜன் பொலிஸாரால் தொடர் துன்புறுத்தல் களுக்கு உள்ளாவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு தடவை எழில்ராஜன் விசாரிக்கப்பட்டார். மூன்றாவது தடவையாகவும் அவரை விசாரணைக்கு வரு மாறு அழைத்த பொலிஸார், பின்னர் அந்த உத்தரவை நீக்கினர் என மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பொலிஸ் அதிகாரியொருவர் எழில்ராஜனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளார் என மன்னிப்புச்சபை தெரிவித்துள் ளது. நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்ட பெயர் விவரங்களை அந்த அதிகாரி கோரியுள்ளார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.நினைவுத்தூபியில் உள்ள பெயர்களில் விடுதலைப் புலிகளின் பெயர்களும் காணப்படுவதாக அதிகாரிகள் தீர்மானித்தால் அருட்தந்தை எழில்ராஜன் இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்படலாம் எனவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது.எழில்ராஜனின் பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் மன் னிப்புச்சபை தெரிவித்துள்ளது.