தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அறிவிக்காமல் படை முகாமிற்கு சம்மந்தன் சென்றது தவறாம்!

Mahinda-Samarasingheஎதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­ன் படை முகாம்­க­ளுக்குச் செல்­லலாம். ஆனால் அதற்­கான முன்­ன­றி­வித்தல் வழங்­கப்­பட வேண்டும். இது தொடர் பில் அர­சாங்கம் அவ­ருக்கு அறி­வித்தல் விடுத்­துள்­ளது என்று அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

உட­ன­டி­யாக வடக்கில் படை­யி­ன­ருக்கு ஆயு­தங்­களை கைவி­டு­மாறும் பாது­காப்பை குறைக்­கு­மாறும் அறி­வு­றுத்தல் வழங்க முடி­யாது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இன்று நாட்டில் யுத்தம் இல்லை சமா­தான சூழல் நில­வு­கின்­றது. எனவே எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னா­கட்டும் அல்­லது பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள எந்­த­வொரு மக்கள் பிர­தி­நி­தி­யா­கட்டும் அவர்­க­ளுக்கு படை முகாம்­க­ளுக்கு செல்ல முடியும். தடை­யில்லை.

ஆனால் அவ்­வாறு செல்­வ­தற்கு முன்­ப­தாக இரா­ணுவத் தள­பதி அல்­லது தான் செல்லப் போகும் படை முகாமின் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் விட­யத்தை கூறி முன்­னேற்­பா­டு­க­ளுடன் முன்­ன­றி­வித்­த­லுடன் செல்ல வேண்டும்.

அவ்­வாறு இல்­லாமல் திடீ­ரென முகா­முக்கு எதிர்க்­கட்சித் தலைவர் சென்­றமை பிழை­யான செயற்­பா­டாகும். வடக்கில் புலிகளுடன்  30 வருட கால­யுத்தம் நடந்­தது. மக்கள் அரச தலை­வர்கள் படை­யினர் என பலர் கொல்­லப்­பட்­டனர்.

இத்­த­கை­யதோர் சூழ்­நி­லையில் யுத்தம் முடிந்து இன்று 7 வரு­டங்கள் தான் கழிந்­துள்­ளன. எனவே இன்றும் தேசிய பாது­காப்பு தொடர்­பாக அதிக கவனம் செலுத்­தப்­பட வேண்­டி­யது அரசின் பொறுப்­பாகும்.

இதனால் வடக்கில் இரா­ணு­வத்தை உட­ன­டி­யாக குறைக்­கவும் ஆயு­தங்­களை கைவி­டு­மாறும் கோற முடி­யாது. ஏனென்றால் தேசிய பாது­காப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

எதிர்க்­கட்சித் தலைவர் தனக்­குள்ள பொலிஸ் பாது­காப்­பு­ட­னேயே படை முகா­முக்கு சென்­றுள்ளார். எதிர்க்­கட்சித் தலைவர் என தெரி­விக்­கப்­பட்ட பின்­னரே கதவு திறக்­கப்­பட்­டது.

அவ­ரது விஜ­யத்தில் வெடிப்­பொ­ருட்­களோ ஆயு­தங்­களோ இருக்­க­வில்லை. இவ்­வா­றான செயற்­பா­டுகள் இன­வா­திகள் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த சாத­க­மாக அமையும்.

எனவே இனி எதிர்­கா­லத்தில் படைமுகாம்களுக்கு எதிர்க்கட்சி தலைவராகட்டும் எந்தவொரு மக்கள் பிரதிநிதியாகட்டும் அவர்கள் படை உயரதிகாரிகளுக்கு அறிவித்து அனுமதி பெற்று முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தல்களை அரசு விடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Comments
Loading...